செகராசசேகரமாலை

செகராசசேகரமாலை என்பது இராமேச சன்மா என்பவரால் 290 விருத்தப் பாடல்களால் 1380-1414க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இதை செகராசசேகரன் மன்னன் இயற்றுவித்தான். இந்த அரசனைப் புகழ்ந்தும், பல்வேறு இந்துக் கடவுள் வாழ்த்துக்களைக் கொண்டும், சகுனப் பலன்கள், யுத்த யாத்திரை, சஞ்சீவினி மருந்துண்ணல் போன்ற விடயங்களை உள்ளடக்கியும் இந்த நூல் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செகராசசேகரமாலை&oldid=1114262" இலிருந்து மீள்விக்கப்பட்டது