செக்கிரெடின்

செக்கிரெடின் (Secretin) என்னும் இயக்குநீரானது இரைப்பை மற்றும் கணையத்தின் சுரப்புகளைக் கட்டுபடுத்துவதன்மூலம் முன்சிறுகுடல் நிகழ்வுகளையும், உடல் முழுவதும் நீர்ச்சம நிலையையும் ஒழுங்குப்படுத்துகிறது. முன்சிறுகுடலில், லிபெர்குஹ்ன் (Lieberkühn) குழிகளில் உள்ள "எஸ்" செல்களினால் செக்கிரெடின் உருவாக்கப்படுகிறது[1]. மனிதர்களில் இப் புரதக்கூறு எஸ்.சி.டி (SCT) என்னும் மரபணுவால் குறியீடு செய்யப்படுகிறது[2] முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயக்குநீர் செக்கிரெடின் ஆகும் [3].

இரப்பையின் சுவர்ஒட்டிய செல்களால் சுரக்கப்படும் அமிலத்தைத் தடுப்பதின் மூலமாகவும், கணையத்திலுள்ள அசினார் உயிரணுக்கள் மற்றும் இடையில் இணைவுற்ற நாளங்களிலிருந்து உருவாகும் இருகாபனேற்று உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமாகவும், முன்சிறுகுடலில் அமிலக்காரத்தன்மையை ஒழுங்குபடுத்துவதில் செக்கிரெடின் துணைப்புரிகின்றது[4].

ஐப்போதலாமசு, கபச் சுரப்பி, சிறுநீரகம் ஆகியவற்றின் மீது செயற்பட்டு சவ்வூடுபரவற்சீராக்கல் பணியினைச் செக்கிரெடின் செய்வதாகக் 2007-ஆம் ஆண்டுக் கண்டறியப்பட்டது[5][6].

மேற்கோள்கள்

தொகு
  1. Häcki WH (September 1980). "Secretin". Clin Gastroenterol 9 (3): 609–32. பப்மெட்:7000396. 
  2. Kopin AS, Wheeler MB, Leiter AB (March 1990). "Secretin: structure of the precursor and tissue distribution of the mRNA". Proc. Natl. Acad. Sci. U.S.A. 87 (6): 2299–2303. doi:10.1073/pnas.87.6.2299. பப்மெட்:2315322. 
  3. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11816326
  4. Whitmore TE, Holloway JL, Lofton-Day CE, Maurer MF, Chen L, Quinton TJ, Vincent JB, Scherer SW, Lok S (2000). "Human secretin (SCT): gene structure, chromosome location, and distribution of mRNA". Cytogenet. Cell Genet. 90 (1–2): 47–52. doi:10.1159/000015658. பப்மெட்:11060443. http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=ccg90047. 
  5. Chu JY, Chung SC, Lam AK, Tam S, Chung SK, Chow BK (April 2007). "Phenotypes developed in secretin receptor-null mice indicated a role for secretin in regulating renal water reabsorption". Mol. Cell. Biol. 27 (7): 2499–2511. doi:10.1128/MCB.01088-06. பப்மெட்:17283064. 
  6. Chu JY, Lee LT, Lai CH, Vaudry H, Chan YS, Yung WH, Chow BK (September 2009). "Secretin as a neurohypophysial factor regulating body water homeostasis". Proc. Natl. Acad. Sci. U.S.A. 106 (37): 15961–15966. doi:10.1073/pnas.0903695106. பப்மெட்:19805236. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்கிரெடின்&oldid=2746287" இலிருந்து மீள்விக்கப்பட்டது