செங்கற்படை

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

செங்கற்படை என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின், முதுகுளத்தூர் வட்டத்தில் சத்திரக்குடி-சிக்கல் சாலையில் அமைந்துள்ளது யாதவர்கள் [கோனார்] மட்டுமே வசிக்கும் இயற்கை சூழல் நிறைந்த கிராமம் ஆகும்.

இக்கிராமமானது வளநாடு ஊராட்சியின் கீழ் வருவதால் வ.செங்கற்படை என்றும் தற்போது கோகுல செங்கற்படை என்றும் அழைக்கப்படுகிறது

இந்த ஊரின் மக்கள்தொகை சுமார் 1500 பேர். விவசாயம், கால்நடைவளர்த்தல், வெளிநாட்டு வேலை இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது.

ஊரின் மையப்பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் ஊரின் கிழக்கில் செங்காருடைய அய்யநாரும், மேற்கில் வாழவந்தாள் அம்மனும், வடக்கில் அக்னி வீரபத்திரரும், தெற்கில் பாதள காளியம்மன், முனியய்யாவும் ஊரின் சிறப்பம்சங்களாக அமைந்துள்ளது

ஊரின் முக்கிய திருவிழாவாக #சித்திரையில் ஏர்உழுதல், கள்ளழகர் எதிர்சேவை, #வைகாசியில் விசாகம் #ஆடியில் முளைப்பாரி #ஆவணியில் கிருஷ்ணர் ஜெயந்தி #மார்கழியில் பஜனை பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

ஊரின் எல்லைகளாக வடக்கில் வளநாடும், தெற்கில் தேரிருவேலியும் , கிழக்கில் மட்டியரேந்தல் மற்றும் மேற்கில் புஷ்பவனம் அமைந்துள்ளது

2020 ஆண்டு முதல் இக்கிராம யாதவ இளைஞர் சங்கம் சார்பில் கேமிரா பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது

இக்கிராமம் மாவட்ட தலை நகர் இராமநாதபுரம், மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை போன்ற பிரதாான நகரங்களுடன் போக்குவரத்து வசதியை கொண்டுள்ளது


"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கற்படை&oldid=3071048" இலிருந்து மீள்விக்கப்பட்டது