செங்கிஸ் கான் (2004 தொலைக்காட்சித் தொடர்)

தொலைக்காட்சி சிகழ்ச்சி

செங்கிஸ் கான் என்பது ஒரு சீன தொலைக்காட்சித் தொடராகும். 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசை அமைத்த செங்கிஸ் கானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டது. செங்கிஸ் கான் கதாபாத்திரத்தில் செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் சகதையின் வழிவந்த பா சென் நடித்தார்.[1] இது முதன்முதலில் 2004ஆம் ஆண்டு சீனாவில் சிசிடீவியிலும், 2005இல் தென் கொரியாவின் கேபிஎஸிலும், மற்றும் துருக்கியின் தேசிய தொலைக்காட்சி டிஆர்டி 1-லும் ஒளிபரப்பப்பட்டது.

கதைச்சுருக்கம் தொகு

30 பிரிவுகளைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பப்பட்டது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த தெமுசினின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை காட்சிப்படுத்தியது. தெமுசினின் பிறப்பில் இருந்து இது தொடங்கியது. தந்தை எசுகை இறந்தபிறகு குழந்தைப் பருவம் மற்றும் இளமை பருவத்தில் பிழைப்பதற்காக நடத்திய போராட்டங்களை காட்டியது. தனது கூட்டாளிகள் மற்றும் தன் தந்தையின் ஆதரவாளர்கள் உதவியுடன் தெமுசின், போர்சிசின் பழங்குடியினத்தின் தலைவர் ஆனார். மங்கோலியாவில் இருந்த போர்ப்பிரபுக்களில் சக்திவாய்ந்தவர்களில் ஒருவர் ஆனார். தசாப்தங்களுக்குப் போர் புரிந்த பிறகு இறுதியாக அனைத்து பழங்குடியினங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். "செங்கிஸ் கான்" என்ற பட்டத்தைப் பெறுகிறார். மேற்கில் குவாரசமியப் பேரரசு மற்றும் தெற்கில் சுரசன்களின் சின் பேரரசை தாக்குவதற்கு தன் இராணுவத்திற்கு தலைமை தாங்குகிறார். இறுதியாக மேற்கு சியா இராச்சியத்திற்கு எதிரான நடவடிக்கையின்போது உடல்நலக் குறைவு காரணமாக இறக்கிறார்.

உசாத்துணை தொகு

  1. (in சீன மொழி) 巴森:再现成吉思汗风采