செங்குத்துப்பாறை

புவியியலில் செங்குத்துப்பாறை என்பது, வானிலையாலழிதல் மற்றும் அரிப்பால் ஏற்படும் மண்ணரிப்பு நிலப்பகுதியாகும்.[1] பொதுவாக இவை, மலைப்பாங்கான பகுதிகளிலும், ஏரிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளிலும், கடற்கரைகளிலும் காணப்படுகின்றன. படிவுப் பாறைகளில் மணற்கல், சுண்ணக்கல், சுண்ணக்கட்டி, தோலமைட் போன்றவை பெரும்பாலும் ஓங்கல்களாக உருவாகக்கூடியவையாகும். தீப்பாறைகளில் ஓங்கலாக மாறக்கூடியவை, கருங்கல் மற்றும் பாசால்ட் போன்றவையாகும்.,

டோவர் நீரிணையின் வெள்ளைநிற செங்குத்துப்பாறை

பெரும்பாலான ஓங்கல்கள் அவற்றின் அடிப்பகுதியில் கற்குவைச் சரிவுகளைக் கொண்டுள்ளன. இச்சரிவுகள் வீழ்பாறைக் குவியல்களாகக் காணப்படுகின்றன.

மேற்கோள்

தொகு
  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குத்துப்பாறை&oldid=3041205" இலிருந்து மீள்விக்கப்பட்டது