செங்கை செந்தமிழ்க்கிழார்

செங்கை செந்தமிழ்க்கிழார் (20 07 1932 – 15 05 1997) தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பேச்சிலும், எழுத்திலும் தனித்தமிழ் நடையைப் பின்பற்றியவர்களில் ஒருவர். [1] இவரது இயற்பெயர் செல்வராசன். பா. போ. நாராயணசாமி, பங்காரு அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். (1989) தன் பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டவர். செங்குட்டுவன், கிள்ளிவளவன், இனியன், பாரி என்று தன் மகன்களுக்குத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டியவர். தன் இல்லத்துக்குத் ’தொல்காப்பியர் இல்லம்’ என்று பெயர் சூட்டிக்கொண்டு தான் வாழ்ந்த ஊரான செங்காட்டுப்பட்டியில் பலரது இல்லங்களுக்குத் தமிழ்ப்பெருமக்களின் பெயரைப் சூட்டிப் பெயர்ப்பலகையும் தன் செலவில் எழுதிப் பதியவைத்து மக்களைத் தமிழில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர். உலகத் தமிழ்க் கழகத்தின் பொருளாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றியவர். பாவாணரின் அணுக்கத் தொண்டராக விளங்கியவர்களில் ஒருவர்.

மேற்கோள் தொகு

  1. செங்கை செந்தமிழ்க்கிழார் நினைவு மலர், துறையூர் தமிழ்ச்சங்கம் வெளியீடு, பதிப்பு ஆண்டு 1999, 40 பக்கங்கள், 21 கட்டுரைகள் கொண்ட நூல்