செங்கோட்டை நாய்

செங்கோட்டை நாய் என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போது அழிந்துவிட்டது.

செங்கோட்டை நாய் குறித்து உலகப்புகழ் பெற்ற விலங்கியல் நிபுனர் டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளில் இந்த இனம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதிகளில் பெரிய வேட்டைகளை நிகழ்த்தப் பயன்படுத்தப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள், புலியைக்கூட இவற்றின் துணையுடன் வேட்டையாடுகின்றனர். மேலும் இவை கோம்பை நாயின் தூரத்து உறவினராக இருக்கலாம்[1] என டெஸ்மாண்ட் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பு டாக்ஸ் - தி அல்டிமேட் டிஸ்கவரி ஆப் ஆவர் 1000 டாக் பிரீட்ஸ் எனும் நூலில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. இரா. சிவசித்து (9 திசம்பர் 2017). "'செங்கோட்டை' சரித்திரம". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோட்டை_நாய்&oldid=3523113" இலிருந்து மீள்விக்கப்பட்டது