செங்கோல்

அரசுச் சின்னம்

செங்கோல் என்பது அரசுச் சின்னங்களுள் ஒன்றாகும். மன்னனுக்கு மகுடமும், அரியணையும் போன்றே செங்கோலும் இன்றியமையாததாகும். மன்னனின் ஆட்சி நேர்மையானதாகவும், நெறி வழுவாததாகவும் அமைய வேண்டும் என்பதன் பொருட்டே செங்கோல் எனும் நேரிய தண்டு அரசன் வீற்றிருக்கும் போதெல்லாம் கையில் காணப்படும்.[1] செம்மை+கோல் என்பதுவே செங்கோல் என்றாகும் (செம்மை = நேர்மை). மாறாக, கொடுமையானதும், அட்டூழியம் நிறைந்ததுவுமான ஆட்சி கொடுங்கோல் ஆட்சி எனப்படும்.

கையில் செங்கோலுடன் ஹமுராபி

தமிழ் இலக்கியத்தில்

தொகு

சிலப்பதிகாரத்தில், செய்யாத தவறுக்காக கோவலனைத் தண்டித்தமையால் பாண்டியன் அறம் வழுவினான். இதனால் அவன் செங்கோல் வளைந்தது என்றும், பின்னர் தன் உயிரைக் கொடுத்து வழுவிய செங்கோலைப் பாண்டிய மன்னன் நிமிர்த்தினான் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. ஞா. தேவநேயப்பாவாணர், பழந்தமிழராட்சி, பக் 21, http://tamilvu.org/library/libindex.htm.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோல்&oldid=3412086" இலிருந்து மீள்விக்கப்பட்டது