செஞ்சி கமலக்கண்ணியம்மன்
செஞ்சி கமலக்கண்ணியம்மன் ( Kamalakkanniyamman Temple, Gingee) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் செஞ்சி கோட்டை செல்லும் வழியில் கமலக்கண்ணியம்மன் கோயில் உள்ளது.[1][2]வருடா வருடம் சித்திரை வளர்பிறை திங்கள் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர் பவனி என பத்து நாட்கள் இங்கு திருவிழா நடக்கும்
சிலையமைப்பு
தொகுவலதுகையில் சக்கரமும் இடதுகையில் சங்கும் ஏந்தி, நின்ற கோலத்தில் முழு உருவ கற்சிலை உள்ளது.
கோயில் அமைப்பு
தொகுநாற்சதுர சிறுமண்டபக் கோயில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இக்கோயில் கருங்கல் மற்றும் சிமெண்டால் உருவாக்கப்பட்டுள்ளது. கோயில் எதிரில் எருமைத்தலை வடிவில் ஒரு கற்சிலை பலிபீடமாக அமைக்கப்பட்டுள்ளது.
வழிபடுவோர்
தொகுசெஞ்சிப் பகுதி மக்கள் மட்டுமின்றி, செஞசி கோட்டையைக் காணவரும் வெளியூர், வெளிநாட்டு மக்களும் இவ்வம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். நெல்லை மாவட்டத்திலும் ஒரு கமலக்கண்ணியம்மன் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "செஞ்சிக்கோட்டை:கமலக்கண்ணியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2023/apr/25/senchikottai-kamalakanni-amman-temple-chitrait-festival-flag-hoisting-3996143.html. பார்த்த நாள்: 21 January 2024.
- ↑ தினத்தந்தி (2022-05-02), "செஞ்சிக்கோட்டை கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21