செந்தலை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
செந்தலை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயிலாகும்.திருக்காட்டுப்பள்ளி இருந்து கண்டியூர் சாலை
அமைவிடம்
தொகுதஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி சாலையில், குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ளது. மணத்திடல் இருந்து 2 கி.மி
மூலவர்
தொகுஇங்குள்ள மூலவர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆவார்.[1]
இடம், ஆறுக்கான பெயர்க்காரணம்
தொகுகந்தர்வப்பெண்ணான சந்திரலேகையால் இத்தலத்திலுள்ள இறைவன் பூசிக்கப்பட்டதால் சந்திரலேகை என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் செந்தலையாக ஆகியுள்ளது. இங்கு யாகசாலையில் இருந்த குடங்களை உருட்டி, வடபுறம் காவிரி திரும்பியதால் குடமுருட்டி என்று கூறுகின்றனர்.[1]
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் ரத சப்தமி, தைப்பொங்கல், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[1]