சென்சௌ 2
சென்சௌ 2 ஜனவரி 9, 2001, அன்று விண்வெளியில் ஏவப்பட்டது. இது இரண்டாவது மனிதர் ஏறிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்வெளிக்கலம் உயிருக்குத் தேவையான சாதனங்களையும், அவசரகால வெளியேற்ற முறைகளையும் கொண்டிருந்தன. இதில் குரங்கு, நாய், முயல் மூன்றும் அனுப்பி வைக்கப்பட்டன. பூமியை 7 நாள்கள் சுற்றி வந்த பின், ஜனவரி 18, 2001, 11.22 உலக நேரத்தின் படி, மத்திய மங்கோலியாவில் தரை இறங்கியது.