சென்சௌ 5
சென்சௌ 5 அக்டோபர் 15, 2003, அன்று 16.40க்கு விண்வெளியில் ஏவப்பட்டது. இது முதலாவது மனிதரை ஏற்றிச்சென்ற சீன விண்வெளிக்கலம். முன்னர் 1999 முதல் ஏவப்பட்ட நான்கு விண்கலங்களும் மனிதர்களை ஏற்றிச் செல்வாத விண்கலங்கள். சீன ரஷ்யா,அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மனிதர்களை ஏற்றுச் செல்லும் விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்ட மூன்றாம் நாடாக ஆகியது.
இக்கலத்தில் யாங் லீவெய் முதல் சீன விண்வெளி வீரராக ஆனார்.
பூமியை 21 மணி 22 நிமிடங்கள் 45 விநாடிகள் 14 முறை பூமியை வலம் வந்த பின், அக்டோபர் 15, 2003 22:22:48 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.