சென்னை-குவாகாத்தி சிறப்பு விரைவுவண்டி
சென்னை-குவாகாத்தி சிறப்பு விரைவுவண்டி வண்டி எண் 06001, ஒரு வழி (கோவிட்) சிறப்பு இரயில் ஆகும்.[1] இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து வாரந்தோறும் திங்கள் கிழமை காலை 05.15 மணி அளவில் புறப்பட்டு, 48.15 மணி நேரத்தில், 2609 கிலோ மீட்டர் பயணித்து, குவாகாத்தி நகரத்திற்கு புதன் கிழமை அன்று காலை 05.30 மணி அளவில் சென்றடையும். இந்த இரயில் 31 இடங்களில் நின்று செல்லும்.[2]
வாரத்தில் ஒரு நாள் திங்கள் கிழமை மட்டும் சென்னை சென்டிரலிலிருந்து புறப்படும் இந்த கோவிட் சிறப்பு விரைவு இரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட 1 இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டிகள் கொண்டிருக்கும்.
முக்கிய நிறுத்தங்கள்
தொகு- கூடூர்
- தெனாலி
- விஜயவாடா
- கட்டக்
- கரக்பூர்
- பர்த்வான்
- ராம்பூர்ஹட்
- நியூ ஜல்பைகுரி
- நியூ பொங்கைகோன்
- ராங்கியா
- காமாக்கியா