சென்னை தமிழிசை மாநாடு (1943)

1943 சென்னை தமிழிசை மாநாடு என்பது சென்னையில் தமிழிசைக்கென பெரிதாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாடு ஆகும்.

பின்புலம் தொகு

தமிழ்நாட்டில் நடந்த பல இசை நிகழ்ச்சிகளில் நெடுங்காலமாக தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில் மியூசிக் அகாதெமியால் ஒழுங்குசெய்யப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை, தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன, இழிவுபடுத்தப்பட்டன.[1] 1940 களில் வலுப்பெற்ற தமிழிசை இயக்கத்துக்கு எதிராக சென்னை மியூசிக் அகாதெமி கடும் எதிர்ப்புக் காட்டியது. இந்தச் சூழலில்தான் 1943 சென்னை தமிழிசை மாநாடு ஒழுங்குசெய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. கல்கி. (2006, 3 பதி). சங்கீத விழாக்கள். சென்னை: சாரதா பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_தமிழிசை_மாநாடு_(1943)&oldid=1480868" இலிருந்து மீள்விக்கப்பட்டது