சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க கலைச்சொல்லாக்கக் குழு

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க கலைச்சொல்லாக்கக் குழு என்பது 1934 இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு குழுவாகும். இக் குழு 60 தமிழ் அறிஞர்களைக் கொண்டிருந்தது. இக் குழு நான்கு ஆண்டுகள் பணி செய்து எட்டுத் துறைகளில் 5300 கலைச்சொற்களை 1936 ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழில் கலைச்சொல்லாக்கதுக்கென முதலில் அமைக்கப்பட்ட குழுக்களில் இதுவும் ஒன்றாகும். இக் கலைச்சொற்கள் பெரும்பாலும் பிற மொழிகளில் அமைந்து இருந்ததால் பல விமர்சனங்களை எதிர்கொண்டது..[1]

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் இராத செல்லப்பன். (2006). கலைச்சொல்லாக்கம். சென்னை: தாமரைப் பதிப்பகம்