சென்னை வேளாண்மைக் கல்லூரி
சென்னை மாகாணத்தில் வேளாண்மைக் கல்வியை கற்று கொடுக்க தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் ஆகும்.
வரலாறு
தொகுஇது சென்னை சைதாப்பேட்டையில் ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட சைதாபேட்டை வேளாண்மை சோதனை பண்ணை வளாகத்தில் 1876 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் வேளாண்மை மூன்றாண்டு சான்றிதழ் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இந்தக் கல்லூரிக்கு முதல் முதல்வராக டபில்யு. ஆர். ராபட்சன் நியமனம் செய்யப்பட்டார். [1] [2]
இவரைத் தொடர்ந்து வால்டர் கீஈஈஸ், எஸ்.எல்.டி சில்வா ஆகியோர் முதல்வராக பதவி வகித்தனர். சைதாப்பேட்டை வேளாண்மைக்கல்வியை கற்றுத் தர சிறந்த இடமாக இல்லாததால் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 1908 ஆம் ஆண்டு இட மாற்றம் செய்யப்பட்டது.