செபாசுட்டியன் முன்சுட்டர்

செபாசுட்டியன் முன்சுட்டர் (Sebastian Münster - 20 சனவரி 1488 – 26 மே 1552),[1][என்பவர் ஒரு செருமன் நிலப்பட வரைஞரும், அண்டப்பட வரைஞரும், கிறித்தவ எபிரேய அறிஞரும் ஆவார். இவரது ஆக்கமான கொஸ்மோகிரபியா என்பதே செருமன் மொழியில் எழுதப்பட்ட உலகம் குறித்த முதல் விளக்கம் ஆகும்.

கிறித்தோஃப் அம்பெர்கர் வரைந்த செபசுத்தியன் முன்சுட்டரின் உருவப்படம். 1552

வாழ்க்கை

தொகு

இவர் மெயின்சுக்கு அண்மையில் உள்ள இங்கெலீம் என்னும் இடத்தில், அன்ட்ரியாசு முன்சுட்டர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையாரும் பிற முன்னோர்களும் வேளாண்மை செய்பவர்கள்.[1][2] 1505 ஆம் ஆண்டில் இவர் பிரான்சிசுக்கன் சபையில் இணைந்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் துறவிமடத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கொன்ராட் பெலிக்கனின் மாணவராக இருந்தார்.[1] 1518ல் எபெராட்-கால்சு பல்கலைக்கழகத்தில் இவர் தனது கல்வியை முடித்துக்கொண்டார். சீர்திருத்தத் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பேசல் பல்கலைக் கழகத்தில் பணியொன்றை ஏற்றுக்கொள்வதற்காக முன்சுட்டர் பிரான்சிசுக்கன் சபையில் இருந்து விலகி லூதரன் திருச்சபையில் இணைந்தார்.[2][3]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Miles Baynton-Williams. "MapForum Issue 10". Mapforum.com. Archived from the original on 2012-08-14. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.
  2. 2.0 2.1 Horst Robert Balz, Gerhard Krause, Gerhard Müller (1994). "Münster, Sebastian (1488-1552)". Theologische Realenzyklopädie 23. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-013852-2. 
  3.    "Münster, Sebastian". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.