செம்பதாகை (சிற்றிதழ்)

செம்பதாகை என்ற இதழ் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற இடதுசாரிக் கட்சியின் தமிழ் மாத ஏடாக 1978 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டிலிருந்து "புதிய பூமி" அதன் வெகுசன மாத ஏடாக வெளிவந்தது. செம்பதாகையை கட்சியின் அரசியற் தத்துவார்த்தக் ஆக்கங்களுக்கான ஏடாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் மோசமடைந்து வந்த யாழ்ப்பாண அரசியல் சூழ்நிலைகளினால் செம்பதாகை மூன்று இதழ்களுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் கொழும்பில் இருந்து சில இதழ்கள் தட்டச்சு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. சோ. தேவராஜா இதன் ஆசிரியராக இருந்தார்.

செம்பதாகை தற்போது இணைய இதழாக புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தத்துவார்த்த இதழாக வெளியிடப்பட்டு வருகிறது.

பணிக்கூற்று

தொகு
  • சமூக அரசியல் ஆய்வு இதழ்.

வெளி இணைப்புகள்

தொகு
தளத்தில்
செம்பதாகை
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பதாகை_(சிற்றிதழ்)&oldid=1269636" இலிருந்து மீள்விக்கப்பட்டது