செம்புரைக்கல்

செந்நிறக் களிமண் (laterite) இதை செம்புரைக்கல், செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் என்றும் அழைப்பர். பாறைகளில் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகமாக இருக்கும். இரும்பு ஆக்சைடு அதிகளவில் இருப்பதால் மண்ணின் நிறம் சிவப்பாக இருக்கிறது. இவற்றில் இருந்து அலுமினியம் தாதுக்களை பெறலாம். இந்த மண்ணில் இருந்து நிக்கல் எடுப்பர். இந்த செம்புரைக்கல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவலாக கிடைக்கிறது. குறிப்பாக, மலைவாழ் பகுதிகளில் இந்தக் கற்கள் அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் நீலகிரி, பழநி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை என மலைப் பிரதேசங்களில் இந்தக் கல்லைப் பார்க்கலாம். சமவெளிப் பகுதியான தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியிலும் இந்தக் கல் உள்ளது.

செந்நிறக் களிமண்

இந்தக் செம்புக்காரைக் கல்லை கனசெவ்வக வடிவில் வெட்டி எடுத்து தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளம், கர்நாடக போன்ற மாநிலங்களிலும் வீடுகள், சுற்றுச்சுவர்கள் போன்றவற்றைக் கட்ட பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கடினமான கல். ஈரத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே இந்தக் கல்லை வெட்டி எடுப்பர். இந்தக் கல்லில் நுண் துளைகள் ஏராளமாக இருக்கும். எனவே, இந்தக் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.[1] இக்கல்லைக கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் வெளிப்புறத்தில் பெரும்பாலும் பூச்சுவேலை செய்வது கிடையாது.

மேற்கோள்கள் =

தொகு
  1. மிது கார்த்தி (13 சனவரி 2018). "அந்தக் காலக் கட்டுமானக் கல்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்புரைக்கல்&oldid=3636419" இலிருந்து மீள்விக்கப்பட்டது