செம்பை சங்கீத உற்சவம்
செம்பை சங்கீத உற்சவம் (Chembai Sangeetholsavam) என்பது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு கருநாடக இசை நிகழ்வாகும். இது இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள குருவாயூரில் குருவாயூர் தேவஸ்வம் அமைப்பால் நடத்தப்படுகிறது. இது கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக நடத்தப்படுகிறது.[1][2]
இடம் | குருவாயூர், கேரளா, இந்தியா |
---|---|
காலம் | 1910 முதல் இன்றுவரை |
நிறுவியவர் | செம்பை வைத்தியநாத பாகவதர் |
வரலாறுதொகு
செம்பை வைத்தியநாத பாகவதர் 60 வருடங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்களைக் கொண்டு கோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.[3][4] இது திருவையாறு தியாகராஜ ஆராதனையைப் போன்றதொரு நிகழ்ச்சியாகும். குருவாயூர் தேவஸ்வம் அமைப்பு செம்பை வைத்தியநாத பாகவதரின் மறைவிற்குப் பின்னர் 1974 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் நினைவாக இந்நிகழ்விற்கு செம்பை சங்கீத உற்சவம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சங்கீத விழாதொகு
2000 முதல் 2500 இசைக் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் குருவாயூர் ஏகாதசி அன்று 12 முதல் 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து செம்பை வைத்தியநாத பாகவதரின் புகழ் பெற்ற 5 பாடல்களைப் பாடுவர். மேலும் தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளையும் பாடுவர்.[5] இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் புகழ் பெற்ற காரணத்தால், 2 முதல் 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தற்போது 12 முதல் 15 நாட்கள் வரை நடைபெறுகிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.thehindu.com/features/metroplus/tunes-to-higher-notes/article4680327.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-09-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-28 அன்று பார்க்கப்பட்டது.