செயற்கை அறிவாண்மைக்கான நிரலாக்க மொழிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஆராய்ச்சியாளர்கள் செயற்கை அறிவாண்மைக்கான பல சிறப்பு நிரலாக்க மொழிகளை உருவாக்கியுள்ளனர்.
மொழிகள்
தொகு- IPL[1] செயற்கை அறிவாண்மைக்காக உருவாக்கப்பட்ட முதல் மொழியாகும் . பட்டியல்கள், சங்கங்கள், அமைப்புகள் (சட்டங்கள்), மாறும் நினைவக ஒதுக்கீடு, தரவு வகைகள், மறுநிகழ்வு, துணை பெறுதல், வாதங்கள்,உருவாக்கிகள் (ஓடைகள்) மற்றும் ஒருங்கிணைந்த பல்பணி உட்பட, பிரச்சனை தீர்க்கும் பொது நிரல்கள் செய்ய முடியும் என்று ஆதரவளிக்கின்ற அம்சங்களை கொண்டுள்ளது.
- Lisp[2] என்பது லேம்டா நுண்கணிதத்தின் அடிப்படையிலமைந்த கணினி நிரல்களுக்கான நடைமுறை கணிதவியல் குறியீட்டு முறையாகும்.இணைப்பு பட்டியல்கள்( Linked lists ) என்பவை Lisp மொழிகளின் பிரதான தரவு அமைப்புகளில் ஒன்றாகும் , மேலும் Lisp மூல குறியீடும் பட்டியல்களினால் உருவாக்கப்பட்டது. Lisp நிரல்களால் மூல குறியீட்டை ஒரு தரவு கட்டமைப்பாக மாற்றியமைக்க முடியும் ,இதன் விளைவாக நிரலாளர்கள் புதிய இலக்கணத்தை அல்லது லிஸ்ப் உட்பொதிக்கப்பட்ட புதிய களம் சார்ந்த நிரலாக்க மொழிகளை உருவாக்க அனுமதிக்க மேக்ரோ அமைப்புகள் முனைந்தன .Lisp இன் பல பிரிவுகள் இன்றுள்ளன,அவற்றுள் Common Lisp, Scheme, மற்றும் Clojure குறிப்பிடத்தக்கன.
- Prolog[3][4] மொழியானது குறிப்பாக குறியீட்டு பகுத்தறிதல், தரவுத்தளம் மற்றும் மொழி பாகுபடுத்தி பயன்பாடுகளில் பயனுள்ளதாக உள்ளது. ப்ரொலாக் இன்று AI இல் பரவலாக பயன்படுகிறது.
- STRIPS என்பது தானியங்கு திட்டமிடுதல் சிக்கல் நேர்வுகளை விளக்குவதற்கான ஒரு மொழியாக உள்ளது. இது ஒரு தொடக்க நிலை, குறிக்கோள் நிலைகள் மற்றும் நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு செயலுக்கும், முன்நிபந்தனைகளும் (செயலை செய்யும் முன் நிறுவப்பட வேண்டும்) மற்றும் பின்நிபந்தனைகளும் (செயலை செய்த பின்னர் நிறுவப்படும்) குறிப்பிடப்படுகின்றன.
- Planner என்பது வழிமுறையியல் மற்றும் தர்க்கவியல் மொழிகளின் கலப்பாக உள்ளது. தருக்க வாக்கியங்களிட்கு ஒரு செயல்முறை விளக்கம் கொடுக்கின்ற போது இது உட்குறிப்புக்களை அமைப்பு-இயக்கிய அனுமானம் கொண்டு விளக்குகிறது.
சில நேரங்களில் AI பயன்பாடுகள் MATLAB மற்றும் Lush போன்ற கணிதவியலுக்காக உருவாக்கப்பட்ட மொழிகளை பயன் படுத்தியும் சி + + மற்றும் போன்ற தரநிலை மொழிகளை கொண்டும் எழுதப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Crevier 1993, ப. 46–48
- ↑
Lisp:
- Luger & Stubblefield 2004, ப. 723–821
- Crevier 1993, ப. 59–62,
- Russell & Norvig 2003, ப. 18
- ↑
History of logic programming:
- Crevier 1993, ப. 190–196.
- ↑
Prolog:
- Poole, Mackworth & Goebel 1998, ப. 477–491,
- Luger & Stubblefield 2004, ப. 641–676, 575–581
மேற்கோள்கள்
தொகுமுக்கிய AI உரைநூல்கள்
தொகு- See also A.I. Textbook survey
- Luger, George; Stubblefield, William (2004), Artificial Intelligence: Structures and Strategies for Complex Problem Solving (5th ed.), The Benjamin/Cummings Publishing Company, Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-4780-1
- Nilsson, Nils (1998), Artificial Intelligence: A New Synthesis, Morgan Kaufmann Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55860-467-4
- வார்ப்புரு:Russell Norvig 2003
- Poole, David; Mackworth, Alan; Goebel, Randy (1998), Computational Intelligence: A Logical Approach, New York: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195102703
- Winston, Patrick Henry (1984), Artificial Intelligence, Reading, Massachusetts: Addison-Wesley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0201082594