செயற்கை உடல் உறுப்பு
செயற்கை உடல் உறுப்பு என்பது உடலின் இயற்கையான உடல் உறுப்புக்கு ஈடாக அதே தொழில்பாடுகளைக் கொண்ட உற்பத்தி செய்யப்பட்ட உறுப்பு ஆகும். ஆய்வாளர்கள் விரல், காது, இதயம், கல்லீரல், கண் உட்பட பல்வேறு உடல் உறுப்புகளை வெற்றிகரமாக செயற்கையாக உருவாக்கி பொருத்தி உள்ளார்கள். எதிர்காலத்தில் உடல் உறுப்புகள் பழுதடையும்போது இந்த செயற்கை உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி மனித வாழ்நாளை நீடிக்கலாம்.