செயற்கை நரம்பணு

செயற்கை நரம்பணு அல்லது செய்நரம்பணு என்பது ஓர் உயிருடம்பில் உள்ள நரம்பணுவைப்போன்ற இயக்கம் கொண்டதாக வுருவாக்கப்பட்ட மிக எளிமையான கணித ஒப்புரு (மாதிரி) ஆகும். செயற்கை நரம்பணுப் பிணையத்தில் அடிப்படை அலகு இந்த செய்நரம்பணு அல்லது செயற்கை நரம்பணுவாகும். செய்நரம்பணுவுக்குப் பல உள்ளிடு இழைகளும், அந்த ஒவ்வொரு உள்ளீடும் ஒவ்வொரு குறிப்பிட்ட வலுவுடன் (நிறை, weight) உள்ளீடு செய்யுமாறும் அமைக்கப்பட்டிருக்கும்.

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடுகளைப் பெற்று, அவற்றின் நிறைகளையும் கணக்கில் கொண்டு ஒரு தொகையை கணக்கிட்டு ஒரு வெளியீட்டைத் தரும். பொதுவாக இந்த தொகையீடு எதோ ஒரு வகையில் வெவ்வேறு உள்ளீடுகளைக் கூட்டாக நிறைகளோடு கணிக்கப்பட்டு ஒரு ஏவல்சார்பு விளைவை உண்டாக்கும். உள்ளீடுகளைத் நிறைப்படி தொகுத்து ஒரு மாற்றல்சார்பு (transfer function) முறைப்படி அனுப்பப்படும்.

கூறுகள்

தொகு
  • உள்ளீடுகள்/inputs
  • நிறைகள்/weights
  • தொகையீடு/summation
  • ஏவல் சார்பு/activation function
  • வெளியீடு/output

கணித அடிப்படை

தொகு

ஒரு தரப்பட்ட செயற்கை நரம்பணுவுக்கு m + 1 உள்ளீடுகள் x0 through xm வரையான உள்ளீட்டு சமிக்கைகளும் அவற்றின் weights w0 through wm எனக் கொள்க. முதலாவது உள்ளீடு x0 பொதுவாக +1 என்ற பெறுமதியைப் பெறும். இதலால் இது ஒர் சாய்வு கொண்ட உள்ளீடு (bias input), with wk0 = bk. இதனால் உண்மையில் m உள்ளீடுகளே நரம்பணுவுக்கு உள்ளன, அவை from x1 to xm.

நரம்பணுவின் k வது வெளியிடு பின்வருமாறு அமையும்:

 

Where   (phi) is the transfer function.

 

இந்த வெளியீடானாது உயிருடலத்தில் உள்ள நரம்பணுவின் உடலச்சு (axon) போன்றது. இது செலுத்தும் இயக்கக்குறிப்பின் மதிப்பு இதனோடு தொடர்பு கொண்டிருக்கும் அடுத்த நரம்பணுவின் உள்ளீடுகளில் ஒன்றாக இயங்கும். அல்லது வேறு விதமாகவும் இயங்கவல்லது

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_நரம்பணு&oldid=2744616" இலிருந்து மீள்விக்கப்பட்டது