செயற்கை விந்து
செயற்கை விந்து என்பது ஆணின் உடலில் இருந்து உற்பத்தியாகும் விந்துக்கு ஈடாக ஆய்வுகூடத்தில் உற்பத்தி செய்யப்படும் விந்து ஆகும். ஒரு நபரின் குருத்தணுக்களில் இருந்து இந்த விந்து உற்பத்தி செய்யப்படுகிறது. முதன் முதலாக மனித விந்துக்களை இவ்வாறு உற்பத்தி செய்யலாம் என்ற தமது கண்டிபிடிப்பின் அறிவிப்பை சூலை, 2009 இல் ஐக்கிய இராச்சிய நியூகாசுரல் பல்கலைக்கழகத்தை சேர்த ஆய்வாளர்கள் வெளியிட்டார்கள்.[1] இது தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
செயற்கை விந்துக்களின் மூலம் ஒரு பெண் ஆணின் துணை இன்றியே ஒரு குழந்தையைப் பெற முடியும். இது இனப்பெருக்கத்தில் ஆணுக்கு இருக்கும் பங்கை இல்லாமல் செய்துவிடுமோ போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.