செயற்கை வைரம்

செயற்கை வைரம் (Synthetic diamond) என்பது தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்படும் வைரம் ஆகும். மிகை வெப்ப மிகை அழுத்த நிலை (High-Pressure High-Temperature synthesis) முறையிலோ அல்லது வேதிய ஆவிப் படிதல் (Chemical Vapor Deposition) முறையிலோ இவை தயாரிக்கப்படுகின்றன. முதல் செயற்கை வைரம் 1953 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இவை பல்வேறு வடிவிலும் பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்க்கப்படுகின்றன. இவை இயற்கை வைரத்தோடு ஒப்பிடுகையில் சில பண்புநலன்களில் விட மேலாகவும் சில பண்பு நலன்களில் கீழாகவும் உள்ளன.

மிகைவெப்ப மிகைஅழுத்த முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வண்ண வைரங்கள்

வைரச் சந்தையில் செயற்கை வைரத்தை இயற்கை வைரத்தில் இருந்து வேறுபடுத்தி அறிய நிறமாலைமானி முறையைப் பயன்படுத்துகின்றனர்.[1][2][3]

செயற்கை வைரம் ஆபரணமாக மட்டுமின்றி வெட்டும் இயந்திரங்கள், ஒளி உமிழ் டையோடுகள், வெப்பக்கடத்திகள் எனப் பல வகைகளில் பயன்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. Fisher, Alice (October 1, 2022). "Lab-grown diamonds: girl's best friend or cut-price sparklers?". The Guardian. Archived from the original on October 1, 2022. பார்க்கப்பட்ட நாள் October 1, 2022.
  2. Suman Tagadiya (February 4, 2023). "Introducing the Largest Lab Grown Diamond in the World: Pride of India". Diamondrensu. பார்க்கப்பட்ட நாள் June 11, 2024.
  3. Zimnisky, Paul (January 22, 2013). "The state of 2013 global rough diamond supply". Resource Investor. Archived from the original on January 28, 2013. பார்க்கப்பட்ட நாள் February 4, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_வைரம்&oldid=4099094" இலிருந்து மீள்விக்கப்பட்டது