செயற்பாட்டுக் கணக்காய்வு

அரசாங்க அல்லது இலாபநோக்கற்ற நிறுவனமொன்றின் முகாமை தனது பொறுப்பிலுள்ள வளங்களின் உபயோகத்தில் சிக்கனம் (economy), வினைத்திறன் (efficiency), வினையாற்றல் (effectiveness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் உள்ள ஆற்றல் பற்றி ஆய்வு செய்யும் கணக்காய்வு செயற்பாட்டுக் கணக்காய்வு (Performance audit) என வரைவிலக்கணப்படுத்தப்படும். இவ் கணக்காய்வின் மூலம் நிறுவனமானது சிக்கனம், வினைத்திறன், வினையாற்றல் என்பவற்றை கடைப்பிடித்துள்ளாதா மற்றும் நிறுவனத்தின் இலக்கு,நோக்கம் அடையப்பட்டுள்ளாதா என அறிந்துகொள்ளமுடியும்.

இவ்வகையான கணக்காய்வு பணத்திற்கான பெறுமதிக்கணக்காய்வு(Value for Money audit) அல்லது நடவடிக்கைக் கணக்காய்வு(Operational audit),அல்லது முகாமைத்துவக் க்ணக்காய்வு(Management audit) என்றும் வேறுபெயர் கொண்டும் அழைக்கப்படும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Performance Auditing Definition (Feb 2014) INTOSAI and GAO
  2. The ECA's methodology platform AWARE