செயலாக்கிகள்

செயலாக்கிகள் (Transcription factors) என்பது மூலக்கூற்று உயிரியலில் நிகழும் ஊக்குவிக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வினையில் (on/off reaction) ஈடுபடும் மரபணு அல்லது மூலக்கூறு ஆகும். இவைகள் உயிரில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலில் மரபணு வெளிபடுதலை ஒருங்கமைப்பு (regulation) பணிகளில் ஈடுபடுபவை. எ.கா. மாந்த உடலில் ஏற்படும் காயங்களின் போது ஏற்படும் குறு ஆர்.என்.ஏ மற்றும் மரபணு வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவாகவோ கட்டுப்படுத்தும் வினைக்கு அல்லது ஒருங்கமைப்பு செய்யும். இதை போல பயரில் தீ நுண்ம நோயின் போது, ஏற்படும் மற்றங்களை கட்டுபடுத்தும் தன்மையெய் செயலாக்கிகள் கொண்டுள்ளன. ஊக்கப்படுத்தும் வினையில் ஈடுபடும் செயலாக்கிகளுக்கு செயலூக்கிகள் (Transcription activation factors, AC2 of Gemini viruses, Activation transcription factors 1, NeuroD) என்றும் மட்டுப்படுத்தும் வினையில் ஈடுபடுபவைக்கு செயல்மட்டிகள் (Neuron Restrictive Silencing Factors, NRSF) எனப் பெயரிடலாம். மேலும் இவைகள் செயல்படும் வகையெய் பொருத்து இரு வகையாக பிரிக்கலாம்.

௧. உள்-செயலாக்கிகள்- Cis- acting factors

௨. வெளி-செயலாக்கிகள்-Trans-acting factors

== உள்-செயலாக்கிகள்: == -cis-Acting factors

சில செயலாக்கிகள் தனது மரபணு வெளிப்படுத்தலை அல்லது புரத மாற்றங்களை தானாக தனது தொடரிகளோடு அல்லது புரத அமைப்புகளோடு சேர்ந்து கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளன. இவைகளுக்கு உள்-செயலாக்கிகள் எனப்பெயர். எ. கா. Hc-Pro of Poty virus

== வெளி-செயலாக்கிகள்: == - trans-Acting factors

இவைகள் மற்ற மரபணு வெளிபடுதலை அவ் மரபணுக்கான தொடரிகளோடு பிணைந்து ஊக்குவிக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வினையில் ஈடுபடும். எ.கா AC2 of Gemini virus

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலாக்கிகள்&oldid=2742801" இலிருந்து மீள்விக்கப்பட்டது