செயலுட்படுத்தி
கணிதத்தில் செயலுட்படுத்தி அல்லது செயலேற்பி (operand) என்பது ஏதேனுமொரு கணிதச் செயலுக்கு உட்படுத்தப்படும் கணிதப் பொருளாகும்.[1] செயலுட்படுத்திகள் உள்ளீடுகள் எனவும் அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு
தொகுஇந்த எண்கணிதக் கோவையில், '+' என்பது கணிதச் செயலான கூட்டலின் குறியீடு; 3, 6 செயலுட்படுத்திகள் அல்லது உள்ளீடுகள்; 9 விளைவு அல்லது வெளியீடு ஆகும்.
கோவைகளாக அமையும் செயலுட்படுத்திகள்
தொகுசெயலுட்படுத்திகளையும் கணிதச் செயல்களையும் கொண்ட கோவையாக ஒரு செயலுட்படுத்தி இருக்கலாம்.
எடுத்துக்காட்டு:
இக்கோவையில் பெருக்கல் செயலுக்கான முதல் செயலுட்படுத்தி '(3 + 5)' ; இரண்டாவது செயலுட்படுத்தி '2'. '(3 + 5)' என்பதும் 3, 5 ஐ செயலுட்படுத்திகளாகவும் கூட்டலைக் கணிதச் செயலாகவும் கொண்ட கோவையாக உள்ளது.
செயல்களின் வரிசை
தொகுகோவையாக அமையும் செயலுட்படுத்திகள் கொண்ட கணிதச் செயல்களில், செயல்களின் முன்னுரிமை விதிகள் மிகவும் முக்கியமானதாகும். செயல்களின் வேறுபட்ட முன்னுரிமை வரிசையால் இறுதி வெளியீட்டின் மதிப்பு வேறுபடும்:[2]
எடுத்துக்காட்டு:
இதில் முதலாவதாக மேற்கொள்ளப்பட வேண்டியது பெருக்கல் செயலாகும். '5' , '2' ஆகியவை பெருக்கலின் செயலுட்படுத்திகள்; '3' , '5 × 2' ஆகியவை கூட்டல் செயலின் செயலுட்படுத்திகள்.
முதலில் கூட்டலைச் செய்து, அதன்பின் பெருக்கினால் கிடைக்கூடிய மதிப்பு உண்மையான மதிப்பிலிருந்து வேறுபட்ட, தவறான மதிப்பாக இருக்கும்.
பயன்படுத்தப்படும் கணிதக் குறியீட்டு முறைகளைப் பொறுத்து செயல்கள், செயலுட்படுத்திகள் அமையும் நிலை மாறுபடும். வழக்கமாக, உள்ளொட்டுக் குறியீட்டு முறையே பின்பற்றப்படுகிறது.[3] முன்னொட்டு, பின்னொட்டு குறியீட்டு முறைகள் இரண்டும் கணினியியலில் அதிகமாக பின்பற்றப்படுகிறது.
'1' , '2' ஆகிய எண்களின் கூட்டலுக்கான குறியீடுகள்
- (உள்ளொட்டுக் குறியீடு)
- (முன்னொட்டுக் குறியீடு)
- (பின்னொட்டுக் குறியீடு)
உள்ளொட்டு குறியீட்டில் செயல்களின் முன்னுரிமை விதி
தொகுசெயல்களும் செயலுட்படுத்திகளும் உள்ளொட்டு குறியீட்டில் எழுதப்பட்டிருக்கும்போது கீழ்க்காணும் வரிசையில் செயல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அடைப்புக்குறி
- அடுக்குகள்
- பெருக்கல்
- வகுத்தல்
- கூட்டல்
- கழித்தல்
எடுத்துக்காட்டு:
- ,
முன்னுரிமை விதிப்படி, அடைப்புக்குறிக்குள் அமையும் செயல் முதலில் செய்யப்பட வேண்டும்.
- (2 + 22).
இங்கு அடைப்புக்குறிக்குள் இரு செயல்கள் கூட்டல், அடுக்கேற்றம் உள்ளன. மேலுள்ள விதிப்படி முதலில் 22 = 4 எனக் கணக்கிடப்படுகிறது:
அடுத்ததாக அடைப்புக்குறிக்குள் உள்ள கூட்டலைச் செய்ய வேண்டும்: (2 + 4) = 6.
இதனை மூலக் கோவையில் பிரதியிட:
அடைப்புக்குறிக்குள் இருந்த செயல்களை முடித்த பின், முன்னுரிமை விதிப்படி, அடுத்து அடுக்கேற்றம் செய்யப்பட வேண்டும். 22 = 4 எனப் பதிலிட,
- .
வரிசைப்படி, அடுத்தது பெருக்கல் ஆகும். 4 × 4 is 16.
செயல்களின் முன்னுரிமை வரிசையில் பெருக்கலுக்கு அடுத்தடுத்துள்ள வகுத்தல், கூட்டல் செயல்கள் இங்கு இல்லாததால், கடைசியான கழித்தலைச் செய்யலாம்.
- .
- ,
செயல்களின் முன்னுரிமை வரிசை பின்பற்றப்பட்டால் மட்டுமே சரியான விடையைப் பெறமுடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ American Heritage Dictionary
- ↑ "Physical Review Style and Notation Guide" (PDF). American Physical Society. Section IV–E–2–e. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
- ↑ "The Implementation and Power of Programming Languages". பார்க்கப்பட்ட நாள் 30 August 2014.