செயிண்ட் லூசியா தேசிய அறக்கட்டளை
செயிண்ட் லூசியா தேசிய அறக்கட்டளை (Saint Lucia National Trust) என்பது செயிண்ட் லூசியா தீவில் 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட் டஓர் இலாபநோக்கற்ற அமைப்பாகும். இது "செயிண்ட் லூசியா தீவின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கும், தேசியபெருமைக்கும், நாட்டிற்கான அன்பிற்கும் இட்டுச் செல்லும் மதிப்பீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.[1]இது கரீபியன் முன்முயற்சி என்ற சுற்றுச்சூழல் அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
அறக்கட்டளை 11 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்களில் ஏழுபேர் நேரடியாக அமைப்பின் பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[1]
தேசிய அடையாளமான புறாதீவு போன்ற தேசியஅடையாளங்கள், மாண்டே வளப்பகுதி போன்ற வரலாற்று அடையாளங்கள், மரியாதீவுகள், அன்சேலா லிபர்டா போன்ற இயற்கை பாதுகாப்பிடங்கள், பாயிண்டு சேபிள் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதி உட்பட பல்வேறு வகையான பகுதிகளை இந்த அறக்கட்டளை நிர்வகிக்கிறது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Saint Lucia National Trust: About Us". பார்க்கப்பட்ட நாள் April 29, 2013.
- ↑ "Sites & Protected Areas". Saint Lucia National Trust. Archived from the original on 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
- ↑ "PROTECTING FAIR HELEN'S PATRIMONY: Our future plans – April 2010 to March 2020" (PDF). Saint Lucia National Trust. Archived (PDF) from the original on 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.