செயேரா
செயேரா (Sheerah), எபிரெய வேதாகமத்தில் 1 நாளாகமம் (1 குறிப்பேடு) 7:24 இல் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெண். அவள் மூன்று நகரங்களைக் கட்டினாள். அவை கீழ்ப்புறமும், மேற்புறமுமான பெத்தோரோன் மற்றும் ஊசேன் சேரா (உசேன்செயேரா) ஆகும்.
"அவள் ஒரு சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்திருக்க வேண்டும்" என்று ஹெர்பர்ட் லாக்கர் குறிப்பிடுகிறார். நகரங்களில் ஒன்றான உசேன்செயேரா அவளது பெயரைக் கொண்டுள்ளதாால், அவள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று ஆண்ட்ஜே லாபான் மற்றும் எஹூட் பென் ஸிவி குறிப்பிடுகின்றனர்.[1]