செய்குன்றம்

செய்குன்றம் செய்யும் பொழுது அடித்தளத்திற்கு எடையைத் தாங்கக் கூடிய பலசாலியையும், மேலே நிற்பதற்கு எடை குறைவாக உள்ள தைரியசாலியையும் பயன்படுத்த வேண்டும்.

இரண்டுபேர் செய்யும் செய்குன்றம் தொகு

  1. ஒருவர் முட்டிகளையும் கைகளையும் தரையில் நன்றாக ஊன்றி குனிந்திருக்க வேண்டும். எடை குறைவாகவும் தைரியசாலியாகவும் உள்ள மற்றொருவர் அவர் முதுகில் ஏறி அசையாமல் நிற்க வேண்டும்.
  2. ஒருவர் கைகளைத் தரையில் ஊன்றி இரு கால்களையும் உதைத்து மேலே எழும்பி தலைகீழாக நிற்க வேண்டும். மற்றொருவர் அவனது கால்களைக் கைத்தாங்களாகப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
  3. ஒருவர் மண்டியிட்டுத் தரையில் உட்கார வேண்டும். அடுத்தவர் உட்காந்து இருப்பவர் தோளில் தன் இரு கால்களைக் கொண்டு நிற்க வேண்டும்.
  4. மண்டியிட்டு உட்கார்ந்து இருப்பவர் தோள் மீது நிற்பவனது காலை நன்றாகப் பிடித்துக் கொண்டு, நிதானமாக எழுந்திருக்க வேண்டும். தோளில் நிற்பவர் அசையாமல் வணக்கம் செய்ய வேண்டும்.[1]
  1. பு. நாகசுந்தரம். உடற்கல்வி மற்றும் சுகாதாரக்கல்வி. pp. 59, 60.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்குன்றம்&oldid=3639458" இலிருந்து மீள்விக்கப்பட்டது