செய்தி நிறுவனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செய்தித்தாள் நிறுவனங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உலகம் முழுவதும் செய்தியாளர்கள் நியமித்து செய்தி சேகரிப்பது என்பது இயலாத செயல்தான். மேலும் அதற்கு அதிகச் செலவுகள் பிடிக்கும். இதுபோன்ற செய்தித்தாள்களுக்குச் செய்திகளைத் திரட்டித் தருவதற்கென்று தனிச் செய்தி நிறுவனங்கள் பல இருக்கின்றன. இந்தச் செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள் நிறுவனங்களிடமிருந்து குறிபிட்ட அளவு கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு செய்திகளை வழங்குகின்றன. இந்தச் செய்திநிறுவனங்கள் உலகம் முழுவதும் செய்தியாளர்களை வைத்துக் கொண்டும், பிற செய்தி நிறுவனங்களோடு தொடர்புகளை வைத்துக் கொண்டும் செய்திகளைச் சேகரித்து வழங்குகின்றன.