செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டி சாஸ்தா கோயில்
செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டி சாஸ்தா கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சாஸ்தா கோயிலாகும். [1] இக்கோயில் பூர்ணகலை, புஷ்கலை துணையில்லாமல் சாஸ்தா தனியாக உள்ளார்.
தலவரலாறு
தொகுசிவந்திப்பட்டியில் வசித்த கோவிந்தன், ஆவுடையம்மாள் தம்பதிகள் பால்வியாபரம் செய்து வந்தனர். அவர்கள் அய்யானார் குளத்தின் வழியாக செல்லும் போது மரத்தின் வேர் இடறி பால் சிந்தியது. அவ்வாறே தொடர்ந்து மூன்றுநாட்கள் சிந்தின. கோவிந்தன் கனவில் யானை மீது வந்த கடவுள் தான் அங்கு நெடுங்காலம் இருப்பதைப் பற்றி கூறியது. எனவே கால்இடறிய இடத்திற்கு சென்று பார்த்தில் ஒரு லிங்கம் புதைந்திருப்பதை கண்டனர். யானை மீது வந்த இறைவன் என்பதால் சாஸ்தா எனப் பெயரிட்டு கோயில்கட்டி வழிபட்டு வருகின்றனர்.
சந்நதிகள்
தொகுஇக்கோயில் மூலவரான சாஸ்தா அழகான வடிவில் இருப்பதால், சுந்தர வடிவ சாஸ்தா என்று அழைத்தனர், அது சுந்தராண்டி சாஸ்தா, சுந்தர பாண்டி சாஸ்தா என மருவி அழைக்கப்படுகிறது. இக்கோயில் சங்கிலி பூதத்தார் சிலையும், பேச்சியம்மன், இசக்கியம்மன், சுடலைமாடசாமி, சுடலை மாடத்தி, பிரம்மராட்சசி, முண்டன், வன்னியராயன் மற்றும் பரிவார தேவதைகள் ஆகியோர் உள்ளனர்.
தலசிறப்பு
தொகு- இக்கோயிலில் வேளாளர் குடும்பத்தினை சார்ந்தவர்கள் பூசை செய்து வருகின்றனர்,
- சாஸ்தாவுக்கு சைவப் படையளும், மற்ற தெய்வங்களுக்கு அசைவ படையலும் தரப்படுகிறது.
- தமிழ் மாதங்களின் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிசேகம் நடத்தப்படுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ சுகமான வாழ்வளிப்பார் சுந்தரபாண்டி சாஸ்தா தினகரன் ஆன்மிக மலர் 12.03.2016 பக்கம் 22-23