செய்யுளிசை அளபெடை

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். செய்யுளிசை அளபெடை செய்யுளில் இசையைக் கூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். இதனை இசைநிறை அளபெடை என்றும் வழங்குவர்.

எடுத்துக்காட்டு

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
ஓஒதல் வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க்- மொழியிடை

இதில் 'அ' எழுத்து இசை நிறைக்க வந்துள்ளது.
கடாக் களிறு என எழுதினால் செப்பலோசை குன்றும்.

கடாக் களிறு
கடா - நிரை - இது சீர் ஆகாது. 'கடாஅ' என இசை கூட்டும்போது 'புளிமா' என்னும் வாய்பாட்டுச் சீராக அமைந்து 'மா முன் நிரை' என்னும் என்னும் வெண்டளையாகி வெண்பாவுக்கு உரிய செப்பலோசையாகிவிடுகிறதது [1]

அடிக்குறிப்பு

தொகு
  1. யாப்பருங்கல விருத்தி உரை - பக்கம் 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுளிசை_அளபெடை&oldid=3442259" இலிருந்து மீள்விக்கப்பட்டது