செர்கீ ஐசென்ஸ்டைன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein உருசியம்: Сергей Михайлович Эйзенштейн, செர்கேய் மிக்கைலவிச் ஐசன்ஸ்டைன், சனவரி 22, 1898 – பெப்ரவரி 11, 1948) ஒரு புரட்சிகர சோவியத் உருசிய திரைப்பட இயக்குனரும், திரைப்படக் கோட்பாட்டாளரும் ஆவார்.[1] பேசாப் படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும், சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.
செர்கீ ஐசென்ஸ்டைன் | |
---|---|
2010களில் செர்கீ ஐசென்ஸ்டைன் | |
பிறப்பு | செர்கீ மிக்கைலவிச் ஐசென்ஸ்டைன் 22 சனவரி 1898 ரீகா, உருசியப் பேரரசு |
இறப்பு | 11 பெப்ரவரி 1948 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | (அகவை 50)
செயற்பாட்டுக் காலம் | 1923–1946 |
வாழ்க்கைத் துணை | பேரா அத்தாசேவா (1934–1948) |
விருதுகள் | ஸ்தாலின் பரிசுகள் (1941, 1946) |