செர்ஜி பொடொலின்ஸ்கி

செர்ஜி பொடொலின்ஸ்கி (Sergei Podolinsky, 1850-1891) உக்ரேனைச் சார்ந்த மருத்துவர். வெப்ப இயக்கவியல் விதிகளையும் பொருளாதாரத்தையும் இணைத்து சிந்தித்தவர். இவ்விதத்தில் இவரை உயிரியல்-பொருளாதாரம் எனும் துறையின் முன்னோடி என கருதலாம். விவசாயத்தை அதனுள் நாம் அளிக்கும் ஆற்றல் அதிலிருந்து அறுவடை செய்யப்படும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என அவர் கருதினார். தம் கருத்துகளை அவர் காரல் மார்க்ஸுக்கு அனுப்பினார்.[1] உழைப்பின் மதிப்பீட்டை ஆற்றல் கணக்கீடுகளுடன் இணைத்து பொடொலின்ஸ்கி செய்த முயற்சிகளை அவர் 1881 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டார். மார்க்சும் ஏங்கல்சும் பொடொலின்ஸ்கியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

உழைப்பின் மதிப்பீட்டை ஆற்றல் கணக்கீடுகளுடன் இணைத்து தான் செய்த முயற்சிகளை பொடொலின்ஸ்கி 1881 இல் ஒரு கட்டுரையில் வெளியிட்டார். உழைப்பு எனப்படுவது ஏற்கனவே பூமியில் உறைந்திருக்கும் ஆற்றலை பயன்படுத்துவதில் மட்டுமல்லாது ஆற்றலை சேகரிக்கவும் வேண்டும் என அவர் கருதினார். வெப்ப இயங்கியலின் இரண்டாம் விதியின் அடிப்படையில் கட்டற்ற வளர்ச்சி என்பது சாத்தியமில்லை, வளர்ச்சிக்கு இயற்கை விதிகள் சில தடைகளை உருவாக்கியுள்ளன என அவர் கருதினார். பொருளாதார செயல்பாடுகளை இப்படி இயற்பியல் கோட்பாடுகளைக் கொண்டு விளக்க முற்படுவது தவறானது என ஏங்கல்ஸ் கருதினார். 1921 இல் ரஷிய நிலவியலாளரும் அறிவியல் சிந்தனையாளருமான வெர்னாட்ஸ்கி பொடொலின்ஸ்கியின் கருத்துகள் முக்கியமானவை என கருதினார். எனினும் அவரது கருத்துகள் முக்கியத்துவம் அளிக்கப்படவே இல்லை. பொடொலின்ஸ்கியின் கருத்துகள் இன்று சூழலியல்-பொருளாதார கோட்பாட்டாளர்களால் மீள்-காணப்பட்டுள்ளன. பொடொலின்ஸ்கியின் கருத்துகளை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சரியாக கணக்கில் எடுத்துக் கொள்ள தவறியதன் மூலம் மார்க்சியம் ஒரு முக்கிய பரிமாணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறிவிட்டது என ஸ்பானிய பொருளாதார அறிஞர் ஜோன் மார்டினசு அலியர் கருதுகிறார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Warnock, John W. (1987). The Politics of Hunger: the Global Food System (pg. 42). Routledge.
  2. http://books.google.com/books?id=pM0KVmJulNMC&pg=PA27&dq=Sergei+Podolinsky&as_brr=3&client=&cd=4#v=snippet&q=alier%20Podolinsky&f=false

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்ஜி_பொடொலின்ஸ்கி&oldid=3858872" இலிருந்து மீள்விக்கப்பட்டது