செர்வண்டைட்டு
(செர்வண்டைட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செர்வண்டைட்டு (Cervantite) என்பது Sb3+Sb5+O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஆண்டிமனி என்ற தனிமத்தின் ஆக்சைடு தாதுப்பொருளாகும்.
செர்வண்டைட் | |
---|---|
சுலோவேகியாவின் நுண்ணிய செர்வணைட் படிகங்கள்(3 மி.மீ. காட்சிப்புலம்) | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Sb3+Sb5+O4 |
இனங்காணல் | |
நிறம் | மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை |
படிக இயல்பு | நுண்ணிய ஊசி போன்ற படிகங்கள்;மிகையளவு |
படிக அமைப்பு | சாய்சதுரப் படிகம் |
பிளப்பு | {001} இல் அபாரம், {100} இல் தெளிவு |
முறிவு | சங்குருவான பாறை |
மோவின் அளவுகோல் வலிமை | 4–5 |
மிளிர்வு | மெழுகு மிளிர்வு, முத்துப்போன்ற ஒளிர்வு, மண்ணாலானது |
கீற்றுவண்ணம் | வெளிர் மஞ்சளீல் இருந்து வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | பகுதி ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 6.5 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சுப்படிகம் |
ஒளிவிலகல் எண் | nα = 2.000 nγ = 2.100 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.100 |
நிறப்பிரிகை | வலுமையற்றது |
மேற்கோள்கள் | [1][2][3] |
1850 ஆம் ஆண்டில் முதன்முதலாக இக்கனிமம் எசுப்பானியாவில் உள்ள செர்வண்டேசு , சியாரா டெ ஆங்கரேசு, உலூகோ மற்றும் கலீசியா போன்ற இடங்களில் காணப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயரால்[2] இக்கனிமம் அழைக்கப்படுகிறது. இக்கனிமத்தின் கண்டுபிடிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் அங்கீகரிக்கப்படாமல் பின்னர் 1862 ஆம் ஆண்டில் செர்பியாவில் [1] உள்ள சயாகா இசுடோலிசு மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பிறகுதான் அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டிமனி காணப்படும் இரண்டாம் நிலை கனிமப்பொருளாக இது கருதப்படுகிறது[1]. இசிடிப்னைட் முதல்நிலைக் கனிமப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.