செர்வண்டைட்டு

செர்வண்டைட்டு (Cervantite) என்பது Sb3+Sb5+O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இது ஆண்டிமனி என்ற தனிமத்தின் ஆக்சைடு தாதுப்பொருளாகும்.

செர்வண்டைட்
சுலோவேகியாவின் நுண்ணிய செர்வணைட் படிகங்கள்(3 மி.மீ. காட்சிப்புலம்)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுSb3+Sb5+O4
இனங்காணல்
நிறம்மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை
படிக இயல்புநுண்ணிய ஊசி போன்ற படிகங்கள்;மிகையளவு
படிக அமைப்புசாய்சதுரப் படிகம்
பிளப்பு{001} இல் அபாரம், {100} இல் தெளிவு
முறிவுசங்குருவான பாறை
மோவின் அளவுகோல் வலிமை4–5
மிளிர்வுமெழுகு மிளிர்வு, முத்துப்போன்ற ஒளிர்வு, மண்ணாலானது
கீற்றுவண்ணம்வெளிர் மஞ்சளீல் இருந்து வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைபகுதி ஒளிபுகும்
ஒப்படர்த்தி6.5
ஒளியியல் பண்புகள்ஈரச்சுப்படிகம்
ஒளிவிலகல் எண்nα = 2.000 nγ = 2.100
இரட்டை ஒளிவிலகல்δ = 0.100
நிறப்பிரிகைவலுமையற்றது
மேற்கோள்கள்[1][2][3]

1850 ஆம் ஆண்டில் முதன்முதலாக இக்கனிமம் எசுப்பானியாவில் உள்ள செர்வண்டேசு , சியாரா டெ ஆங்கரேசு, உலூகோ மற்றும் கலீசியா போன்ற இடங்களில் காணப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயரால்[2] இக்கனிமம் அழைக்கப்படுகிறது. இக்கனிமத்தின் கண்டுபிடிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் அங்கீகரிக்கப்படாமல் பின்னர் 1862 ஆம் ஆண்டில் செர்பியாவில் [1] உள்ள சயாகா இசுடோலிசு மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பிறகுதான் அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டிமனி காணப்படும் இரண்டாம் நிலை கனிமப்பொருளாக இது கருதப்படுகிறது[1]. இசிடிப்னைட் முதல்நிலைக் கனிமப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

செர்வண்டைட் மற்றும் வேலண்டினைட் கனிமங்கள், சீனாவில் உள்ள ஊனான் மாகாணத்தின் சிக்குவான்சான் சுரங்கத்தில் இசிடிப்னைட் கனிமத்திற்கு மாற்றாக எடுக்கப்படுகிறது.(படம்: 16.1 x 5.0 x 3.0 செ.மீ).

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்வண்டைட்டு&oldid=2052222" இலிருந்து மீள்விக்கப்பட்டது