செலவு (வெட்சி)
தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் செலவு என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். செலவு என்னும் சொல் "செல்லுதல்". "போதல்" ஆகிய பொருளைக் கொடுக்கும். வெட்சித் திணையில், பகைவருடைய பசுக் கூட்டங்களைக் கவர்வதற்காகச் செல்லும் செயலைப் பொருளாகக் கொள்ளும் துறை செலவு எனப்படுகிறது.
இதனை விளக்க, "வில் தாங்கிய வீரர்கள், பகைவருடைய இடத்தை நோக்கி மலைகள் கொண்ட காட்டினூடாகச் சென்றது"[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- வில்லேர் உழவர் வேற்றுப் புலமுன்னிக்"
- கல்லேர் கானம் கடந்து சென்றன்று
எடுத்துக்காட்டு
தொகு- கூற்றினத்து அன்னார் கொடுவின் இடனேந்தி
- பாற்றினம் பின்படர முன்படர்ந்து - ஏற்றினம்
- நின்ற நிலைகருதி ஏகினார் நீள்கழைய
- குன்றம் கொடுவில் லவர்
- - புறப்பொருள் வெண்பாமாலை 04.
குறிப்பு
தொகு- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 20
உசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.