செலினா பேகம்

செலினா பேகம் ( வங்காள மொழி: শেলিনা বেগম ) ஓர் ஆங்கில பத்திரிகையாளர். ஏசியன் நியூஸ் என்ற ஊடகத்தின் ஆசிரியராகவும், மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் என்ற ஊடகத்தின் தலைமை வணிக நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.

Shelina Begum
தாய்மொழியில் பெயர்শেলিনা বেগম
பிறப்பு27 திசம்பர் 1979 (1979-12-27) (அகவை 44)
Wardleworth, Rochdale, Greater Manchester, England
தேசியம்British
படித்த கல்வி நிறுவனங்கள்Hopwood Hall College
City of Liverpool College
பணிJournalist
செயற்பாட்டுக்
காலம்
1999–present
பணியகம்Manchester Evening News

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 27,அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் பிறந்தார்.[1] பாளிங்கே பார்க் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். ஆங்கில, சமூகவியல் மற்றும் சமயக் படிப்பை ஹோப்வுட் ஹால் கல்லூரி படித்தார்.[2]

லிவர்பூல் கல்லூரியின் தேசிய பத்திரிகையாளர் பயிற்சிக்கான கவுன்சில் பத்திரிக்கையாளர் பயிற்சி பெற்று [3] ஏசியன் நியூஸ் செய்தி ஊடகத்தில் ஜூனியர் நிருபராக [1] பணியாற்றினார்.

விருதுகள் தொகு

பிரித்தானிய அணுசக்தி எரிபொருட்களின் நிதியுதவி பெற்ற பத்திரிகையில் பேகம் 2006 ஆண்டின் சிறந்த வடமேற்கு பத்திரிகையாளராக அறிவிக்கப்பட்டார். காஷ்மீரில் ஏற்பட்ட பூகம்பத்தையும் மற்றும் பிற பிரத்தியேகங்களை பற்றி செய்திகளை பதிவு செய்ததற்காக இவர் இந்த விருதை வென்றார். 15 ஆண்டு வரலாற்றில் இந்த விருதினை பெற்ற முதல் ஆசிய பெண் பத்திரிக்கையாளர் என்ற பெருமையும் பேகம் பெற்றார். 2007 ஆம் ஆண்டில், பியூஷன் விருதுகளில் பேகம் இந்த ஆண்டின் ஊடக ஆளுமைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில், இந்த ஆண்டின் வணிக பத்திரிகையாளருக்கான O2 மீடியா விருதுகளில் இறுதிப் போட்டியாளராக இருந்தார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பேகம் ஓர் முஸ்லீம்.[5] இவர் வங்காள மொழியில் சரளமாக பேசுவார்.மேலும் இவரால் உருது மற்றும் இந்தி மொழியையும் புரிந்து கொள்ள முடியும்.[2] இவர் இனவெறிக்கு எதிரான எதிர்ப்பு பிரச்சாரத்திலும் பங்கேற்றுள்ளார்.[6]

மேலும் காண்க தொகு

  • பிரித்தானிய பங்களாதேஷ்
  • பிரித்தானிய பங்களாதேஷியர்களின் பட்டியல்

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Begum, Shelina (14 August 2007). "Our Shelina is North West's best". Manchester Evening News (Manchester). http://www.manchestereveningnews.co.uk/news/local-news/our-shelina-is-north-wests-best-1037155. பார்த்த நாள்: 1 August 2015. 
  2. 2.0 2.1 "We're Ten And We're Changing". Manchester Evening News (Manchester). 14 August 2007. http://www.manchestereveningnews.co.uk/news/local-news/were-ten-and-were-changing-999789. பார்த்த நாள்: 1 August 2015. 
  3. "Shelina Begum". Redhotcurry.com இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061021163743/http://www.redhotcurry.com/profiles/shelina-begum.htm. பார்த்த நாள்: 1 August 2014. 
  4. "Shelina Begum". Mosaic Network. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Begum, Shelina (14 August 2007). "Shelina discovers what life is like behind the niqab". Manchester Evening News (Manchester). http://www.manchestereveningnews.co.uk/news/local-news/shelina-discovers-what-life-is-like-1046423. பார்த்த நாள்: 1 August 2015. 
  6. "Campaigners march against BNP". BBC News. 4 May 2002. http://news.bbc.co.uk/1/hi/uk_politics/1967608.stm. பார்த்த நாள்: 1 August 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலினா_பேகம்&oldid=3925060" இலிருந்து மீள்விக்கப்பட்டது