செலீனினிக் அமிலம்

கரிமசெலீனியம் மற்றும் ஓர் ஆக்சோ அமிலம்

செலீனினிக் அமிலம் (seleninic acid) என்பது RSeO2H என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட கரிமசெலீனியம் சேர்மம் மற்றும் ஓர் ஆக்சோ அமிலம் வகைச் சேர்மமாகும். வாய்ப்பாட்டிலுள்ள R ≠ H என்பதைக் குறிக்கும். கரிமசெலீனியம் ஆக்சோ அமிலங்கள் குடும்பத்தில் இதுவும் ஓர் உறுப்பினர் ஆகும். செலீனெனிக் அமிலங்கள், செலீனோனிக் அமிலங்கள் போன்றவை மற்ற உறுப்பினர்களாகும். இவை முறையே RSeOH மற்றும் RSeO3H என்ற பொது வாய்ப்பாடுகளால் குறிக்கப்படுகின்றன. மெத்தில்செலீனினிக் அமிலம் என்றழைக்கப்படும் மெத்தேன்செலீனினிக் அமிலம் (CH3SeO2H) இக்குடும்பத்தின் மூல உறுப்பினர் ஆகும்.

மெத்தேன்செலீனினிக் அமிலத்தின் கட்டமைப்பு

வினைகளும் பயன்பாடும்

தொகு

ஐதரசன் பெராக்சைடு எப்பாக்சினேற்றம், பேயர்-வில்லிகெர் ஆக்சிசனேற்றங்கள், தயோயீத்தர் ஆக்சிசனேற்றம் போன்ற பல வினைகளுக்கு செலீனினிக் அமிலங்கள் அதிலும் குறிப்பாக அரீன்செலினினிக் அமிலங்கள் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. RSe(O)OOH என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்ட பெராக்சிசெலினினிக் அமிலங்கள் செயல்திறன் மிக்க ஆக்சிகரணிகளாகக் கருதப்படுகின்றன [1][2][3].

கட்டமைப்பு

தொகு

மெத்தேன்செலீனினிக் அமிலம் எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளால் வரையறுக்கப்படுகிறது [4]. Se-C = 1.925(8) Å, Se-O = 1.672(7) Å, Se-OH = 1.756(7) Å என்ற அளவுகளில் பிணைப்பு நீளமும் HO-Se-C = 93.5(3)° மற்றும் OSeC = 101.4(3)° என்ற பிணைப்புக் கோண அளவுகளும் பெற்று செலீனியம் அணு கூர்நுனிக் கோபுர எலக்ட்ரான் ஒழுங்கமைவுடன் காணப்படுகிறது. மேலும், இக்கட்டமைப்பு மெத்தேன்சல்பினிக் அமிலத்தின் கட்டமைப்புடன் சமவுருவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது [5].

பென்சீன்செலீனினிக் அமிலமும் (C6H5SeO2H) முன்னதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளால் அடையாளப்படுத்தப்பட்டது [6]. இதன் ஒளியியல் தெளிவும் அறியப்பட்டுள்ளது [7].

மேற்கோள்கள்

தொகு
  1. ten Brink, G.-J.; Fernandes, B. C. M.; van Vliet, M. C. A.; Arends, I. W. C. E.; Sheldon, R. A. "Selenium catalyzed oxidations with aqueous hydrogen peroxide. Part I. Epoxidation reactions in homogeneous solution." J. Chem. Soc., Perkin Trans., 1 2001, 224–228. எஆசு:10.1039/b008198l 10.1039/b008198l
  2. ten Brink, G.-J.; Vis, J.-M.; Arends, I. W. C. E.; Sheldon, R. A. "Selenium-Catalyzed Oxidations with Aqueous Hydrogen Peroxide. 2. Baeyer-Villiger Reactions in Homogeneous Solution." J. Org. Chem. 2001, 66, 2429–2433. எஆசு:10.1021/jo0057710 10.1021/jo0057710
  3. Mercier, E. A.; Smith, C. D.; Parvez, M.; Back, T. G. "Cyclic Seleninate Esters as Catalysts for the Oxidation of Sulfides to Sulfoxides, Epoxidation of Alkenes, and Conversion of Enamines to α-Hydroxyketones." J. Org. Chem. 2012, 77, 3508–3517. எஆசு:10.1021/jo300313v 10.1021/jo300313v
  4. Block, E.; Birringer, M.; Jiang, W.; Nakahodo, T.; Thompson, H. J.; Toscano, P. J.; Uzar, H.; Zhang, X.; Zhu, Z. "Allium chemistry: Synthesis, natural occurrence, biological activity, and chemistry of Se-alk(en)ylselenocysteines and their γ-glutamyl derivatives and oxidation products." J. Agric. Food Chem. 2001, 49, 458–470. எஆசு:10.1021/jf001097b 10.1021/jf001097b
  5. Seff, K.; Heidner, E. G.; Meyers, M.; Trueblood, K. N. "The crystal and molecular structure of methanesulfinic acid." Acta Crystallographica Section B 1969, 25, 350–354.
  6. J. H. Bryden, H.; McCullough, J. D. "The crystal structure of benzeneseleninic acid." Acta Crystallogr. 1954. 7, 833–838. எஆசு:10.1107/S0365110X54002551
  7. Toshio, S.; Watanabe, I.; Kamigata, N. "Optically active seleninic acids: optical resolution and stability." Angew. Chem., Int. Edn. 2001, 40, 2460–2462. எஆசு:10.1002/1521-3773(20010702)40:13<2460::AID-ANIE2460>3.0.CO;2-Q 10.1002/1521-3773(20010702)40:13<2460::AID-ANIE2460>3.0.CO;2-Q
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனினிக்_அமிலம்&oldid=3780416" இலிருந்து மீள்விக்கப்பட்டது