செலோன்
கீட்டோனின் கட்டமைப்பை ஒத்த ஒரு கரிமசெலீனியம் சேர்மம்
வேதியியலில் செலோன் (Selone) என்பது கீட்டோனின் கட்டமைப்பை ஒத்த ஒரு கரிமசெலீனியம் சேர்மம் ஆகும். கீட்டோன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆக்சிசனை செலீனியம் இடம்பெயர்ச்சி செய்து செலோன் உருவாகிறது. செலீனியம்-77 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியலில் பயன்படும் படியா வகையிடப்பட்ட முகவராக இச்சேர்மம் பயன்படுகிறது[1]. முப்பரிமாணச்சிறப்பு ஆல்டால் வினையில் படியா ஆக்சசோலிடின்செலோன்கள் சிறந்த இணை பங்கேற்பிகளாகத் திகழ்கின்றன. ஆல்டால் விளைபொருளின் ஆடிமாற்றியத் தூய்மையை 77Se அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையின் மூலமாக சரிபார்க்க இயலும்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ J. Peng; J. D. Odom; R. B. Dunlap; L. A. Silks III (1994). "Use of a selone chiral derivatizing agent for the absolute configurational assignment of stereogenic center". Tetrahedron: Asymmetry 5 (9): 1627–1630. doi:10.1016/0957-4166(94)80066-9. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6THT-42WH2NR-2&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=1150519008&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=e5597583dabea2afe8d93ca034033400.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ L. Silks; D. Kimball; D. Hatch (2009). "Chiral N-Acetyl Selone-Promoted Aldol Reactions". Synthetic Communications 39 (4): 641–653. doi:10.1080/00397910802419706. http://www.ingentaconnect.com/content/tandf/lsyc/2009/00000039/00000004/art00010.