செல்லுலோசு அசிட்டேட் பியூட்டைரேட்டு

செல்லுலோசு அசிட்டேட் பியூட்டைரேட்டு (Cellulose acetate butyrate) என்பது செல்லுலோசு அசிட்டேட்டின் கலப்பு எசுத்தர் வெப்ப நெகிழி பலபடியின் வழிப்பெறுதியாகும். இது அசிட்டேட்டு மற்றும் பியூட்டைரேட்டு இரண்டையும் வேதி வினைக்குழுக்களாகக் கொண்டுள்ளது. செல்லுலோசு அசிட்டேட்டுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட கால்நிலை எதிர்ப்பையும் குறைந்த அளவு ஈரப்பத உறிஞ்சலையும் பெற்றுள்ளது. ஒரு செல்லுலோசு அசிட்டேட் பியூட்டைரேட்டு சேர்மத்தின் சரியான பண்புகள் பியூட்டைரேட்டு மற்றும் அசிட்டேட்டு வேதி வினைக்குழுக்களின் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது.

செல்லுலோசு அசிட்டேட் பியூட்டைரேட்டு

அசிட்டைல் (நீலம்) மற்றும் பியூட்டைரைல் (பச்சை) குழுக்களுடன் செல்லுலோசு அசிடேட் பியூட்டைரேட்டின் எளிமைப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எசுத்தர் குழுக்களின் விநியோகம் பலபடி சங்கிலிக்குள் மாறுபடும்.
இனங்காட்டிகள்
9004-36-8
பண்புகள்
தோற்றம் வெண் திண்மம்[1]
மணம் நெடியற்றது[1]
உருகுநிலை 127–205 °C (261–401 °F; 400–478 K)[1]
மிகக்குறைவு[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

செல்லுலோசு அசிட்டேட் பியூட்டைரேட்டு பொதுவாக ஒரு பிணைப்பியாக அல்லது பூச்சுகளில் சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் மற்றொரு பயன்பாடானது திடமான வாயு-ஊடுருவக்கூடிய தொடு வில்லைகள் உற்பத்தியில் பயன்படுவதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Safety Data Sheet". fishersci.se.
  2. "CAB". polymerdatabase.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.