சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா
சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா (Sheikh Jamal Inani National Park)(இனானி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா ஆகும்.[1] காக்ஸ் பஜார் மாவட்டத்தின் கீழ் உக்கியா உபாசிலாவில் அமைந்துள்ள இந்த பூங்கா வங்காளதேசத்தின் முதல் அதிபர் சேக் முஜிபுர் ரஹ்மானின் இரண்டாவது மகனான சேக் ஜமாலின் பெயரால் அழைக்கப்படுகிறது.
சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா | |
---|---|
இனாய் தேசிய பூங்காவில் ஆசிய யானை | |
அமைவிடம் | காக்ஸ் பஜார் மாவட்டம், சாதோகிராம், வங்காள தேசம் |
ஆள்கூறுகள் | 21°08′24″N 92°04′56″E / 21.1400025°N 92.0820834°E |
பரப்பளவு | 7,085 ஹெக்டேர் |
நிறுவப்பட்டது | 9 சூலை 2019 |
வங்காளதேச அரசு இதை 9 சூலை 2019 அன்று தேசிய பூங்காவாக அறிவித்தது.[2] ஆசிய யானையின் தாயகம் இது. இனானி தேசிய பூங்கா 7,085 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இது உக்கியாவின் இனானி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Protected areas" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
- ↑ "Department of Printing and Publications". பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.
- ↑ "CBD International" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 June 2020.