சேக் பிகாரி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சேக் பிகாரி (Sheikh Bhikhari ) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீர்ராவார். இவர் வாழ்ந்த காலம் 1831 முதல் 1858 ஆம் ஆண்டு வரையிலான காலமாகும். அரசரும் சுதந்திரப்போராட்ட வீர்ருமான திகாயிட் உம்ராவ் சிங்கிடம் இவர் திவானாகப் பணியாற்றினார். சேக் பிகாரி ஒரு நெசவாள அன்சாரி குடும்பத்தில் புத்முவில் பிறந்தார். ஆனால் தனது வாழ்நாள் முழுவதையும் ஓர்மஞ்சியின் குடியா-லோத்வா கிராமத்தில் கழித்தார். இவரும் திகாயிட் உம்ராவ் சிங்கும் ராஞ்சி ராம்கார் பாதையிலுள்ள சுட்டுபாலு பகுதியில் மரங்களை வெட்டித்தள்ளி கிழக்கிந்திய கம்பெனி படை ராஞ்சியை ஆக்கிரமிப்பதைத் தடுத்தனர். கிழக்கிந்தியப் நிறுவனப் படையுடன் இவர்களிருவரும் சண்டையிட்டனர். பின்னர் ஆங்கிலேயர்கள் இவரை திக்காயிட் உம்ராவ் சிங்குடன் சேர்த்து 1858 ஆம் ஆண்டு ராம்கரில் சுட்டுபாலுவில் ஆலமரத்தில் தூக்கிலிட்டனர். [1][2][3]

சேக் பிகாரி
Sheikh Bhikhari
பிறப்பு1831
புத்மு, ராஞ்சி மாவட்டம், பீகார் தற்போது சார்க்கண்ட்)
இறப்பு8 சனவரி, 1858
ராம்கார்
பணிதிவான் மற்றும் படைத்தலைவர்
அறியப்படுவதுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_பிகாரி&oldid=3061804" இருந்து மீள்விக்கப்பட்டது