சேண்பாக்கம்
சேண்பாக்கம் என்பது கொணவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வேலூர் மாநகராட்சியின் மண்டலம் -4 தலைமையிடத்துடனும் அமைந்துள்ள ஒரு சிறிய வட்டாரமாகும். இங்கு பிரபலமான சுயம்பு விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
"தட்சிண நவ பிருந்தாவனம்" என அழைக்கப்படும் சிரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் இங்கு அமைந்துள்ளது. இதன் கீழ் புதைக்கப்பட்டிருந்த, 8 (எட்டு) மூலா பிருந்தாவனம் கண்டுபிடித்து 1991-இல், புதுப்பித்தனர். சிரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைக்கப்பட்டதுடன், இது (தட்சிணா) நவ பிருந்தாவன் என அழைக்கப்பட்டது. விட்டுணுசாகமரமாருக்காக சிரீ மத்வாச்சார்யா இந்த தலத்தில் கிரந்த எழுத்துக்களில் மந்திரம் எழுதியுள்ளார். சிரீ வியாசராசர் இந்த கோவிலில் முக்கிய தெய்வத்தை நிறுவியுள்ளார். சிரீ ராகவேந்திர சுவாமி 14 நாட்கள் இங்கு தங்கியிருந்து தியானத்தில் இருந்தார்.
விளக்கப்படங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,சேண்பாக்கம் மக்கள் தொகை 13,459 ஆக இருந்தது. இவர்களில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள் ஆவார்கள். சேண்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேண்பாக்கத்தில் 12% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.