சேதி மொகல்லா

சேதி மொகல்லா (Sethi Mohallah) என்பது சில நேரங்களில் சேதியன் மொகல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானின் பழைய நகரமான பெசாவரில் ஒரு பழைய மற்றும் பாரம்பரியமாக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்புற வீடாகும். மொகல்லாவில் சேதி குடும்பத்தினரால் கட்டப்பட்ட ஏழு தெற்காசிய மாளிகைகள் உள்ளன. அவை மத்திய ஆசியாவை நினைவூட்டும் பாணியில் விரிவான மர வேலைப்பாடுகளுடன் இது கட்டப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. [1]

சேதி மொகல்லா
அண்டைப் பகுதி
சேத்தி மொகல்லா மத்திய ஆசிய பாணி வீடுகளுக்கு பிரபலமானது.
சேத்தி மொகல்லா மத்திய ஆசிய பாணி வீடுகளுக்கு பிரபலமானது.
நாடுபாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நகரம்பெசாவர்

பின்னணி

தொகு
 
சேதி மொகல்லாவின் முற்றம் ஒன்றின் பார்வை

சீனா, இந்தியா, ஆப்கானித்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் பல்வேறு வணிகங்களைக் கொண்டிருந்த வர்த்தகர்களான் சேதி குடும்பத்தினர் மசார் செரீப், தாசுகண்ட், புகாரா, சமர்காண்ட் மற்றும் ஆசிய பிராந்தியத்தின் பிற நகரங்களிலிலும் தங்கள் வர்த்தக மையங்களைக் கொண்டிருந்தனர். சேதி குடும்பம் பெசாவரில் கணிசமான பொதுநலப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனை மற்றும் இசுலாமியக் கல்லூரி மசூதி ஆகியவற்றையும் கட்டினர். மேலும் ஏழைகளுக்கான குடிநீர் கிணறுகள் அமைப்பதில் பங்களிப்பு செய்திருந்தனர். [2]

1917 ஆம் ஆண்டில் உருசியப் புரட்சியின் போது சேதிகளின் வணிகம் வீழ்ச்சி தொடங்கியது. அவர்களின் வணிகங்கள் பின்னடைவுகளை சந்தித்தது. அதன்பிறகு ஒருபோதும் மீளவில்லை. எனவே அவர்களின் நிலைமை மத்திய ஆசியாவை விட்டு வெளியேறி பெசாவருக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தின. [1]

இருப்பிடம்

தொகு

இது பெசாவரின் பழைய சுவர் நகரத்தில் காந்தா கர் (கடிகார கோபுரம்), கலான் கடைவீதி மற்றும் கோர்கத்ரி ஆகிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

வடிவமைப்பு

தொகு

புகாராவின் வடமொழி கட்டிடக்கலை உத்வேகத்துடன் இங்கு வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு தெஹ்கானாக்கள் (அடித்தள அறைகள்), ஒரு பாலகானா (மேல் மாடி), தலான்ஸ் (பெரிய அரங்குகள்), சினிகானாக்கள் (புகைபோக்கிகள் மீது அலங்காரம் மற்றும் கலை துண்டுகள் காட்டப்படும் அறைகள்) மற்றும் நீரூற்றுகள் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகின்றன. இங்குள்ள கூரைகள் வர்ணம் பூசப்பட்டு சுவர்கள் கண்ணாடி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் ஒன்று வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசாங்கத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இரண்டு பகுதிகள் உள்ளது. ஆண்களுகென ஒன்றும் பெண்களுக்கு ஒன்றும் என உள்ளன. இதன் ஒட்டுமொத்த கட்டமைப்பும் செங்கல் மற்றும் மரவேலைகளின் கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் செதுக்கப்பட்ட மர கதவுகள் மற்றும் பால்கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வர்ணம் பூசப்பட்ட மற்றும் பிரதிபலித்த ஏட்ரியங்கள் காற்று உள்ளே வரவும் மற்றும் கவர்ச்சிகரமான காட்சிகளை வழங்குகின்றன. இதன் முக்கிய நுழைவாயில்கள் மிகச்சிறப்பாக செதுக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்டவை.

இது 12 அறைகள் மற்றும் நான்கு அடித்தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு நீரூற்றும் இதில் அடங்கும். வடிவியல் வடிவமைப்புகளுடன் வண்ணமயமான கண்ணாடி கூரைகள், சுவர்களில் பல்வேறு அற்புதமான வடிவமைப்புகளின் செதுக்கல்களுடன் மரவேலை, ஒரு பெரிய ஓய்வு இடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மரத்தால் செய்யப்பட்ட இது தக்-இ-சுலைமானி என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் சூரிய ஒளி வெளிப்படவும், அழகான வென்டிலேட்டர்கள், சாய்ந்த ஜன்னல்கள், மர சுவர் அலமாரியில், திட்டமிடப்பட்ட மரச்சட்டங்களுடன் புகைபோக்கிகள் மற்றும் சிவப்பு செங்கல் படிக்கட்டுகள் வீட்டின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

புகைப்படத் தொகுப்பு

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதி_மொகல்லா&oldid=3067051" இலிருந்து மீள்விக்கப்பட்டது