சேந்தன் கீரனார்
சேந்தன் கீரனார் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 311 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாக உள்ளது. புலவர் பெயர் கீரனார்.இவரது தந்தை பெயர் சேந்தன்.
பாடல் சொல்லும் செய்தி
தொகுஅவர் தேரில் வந்ததை மணல்மேட்டில் புன்னைமலர் கொய்யும் ஆயமெல்லாம் கண்டது. நான் மட்டும் காணவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் அலர் தூற்றுவது எங்கே ஒழியப்போகிறது?
அவன் அவளுக்காகக் காத்திருக்கும்போது தலைவி இவ்வாறு தன் தோழியிடம் சொல்கிறாள்.