சேந்தியோசைட்டு
ஆர்சனேட்டுக் கனிமம்
சேந்தியோசைட்டு (Xanthiosite) என்பது Ni3(AsO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆர்சனேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. 1858 ஆம் ஆண்டு செருமனியில் சேந்தியோசைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கிரீசு நாட்டிலும் இக்கனிமம் இருப்பதாக அறியப்படுகிறது. தங்க மஞ்சள் நிறத்தில் கதிரியக்கப் பண்பு அற்றதாகக் காணப்படுகிறது.
சேந்தியோசைட்டு Xanthiosite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆர்சனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ni3(AsO4)2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 453.91 கி/மோல் |
நிறம் | தங்க மஞ்சள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 5.37 - 5.47 |
மேற்கோள்கள் | [1][2] |