சேன் கொய்சான்

சேன் கொய்சான் (ஆங்கிலம்: Shane Koyczan) (பிறப்பு 22 மே 1976) ஒரு கனடிய கவிஞர், எழுத்தாளர். உலகின் சிறந்த சொல் நிகழ்த்துனர்களில் (spoken word performers) ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] 2000 ஆண்டு இவர் அமெரிக்கத் தேசிய கவிதைப் போட்டியில் (National Poetry Slam) தனி வெற்றியாளர் பிரிவில் வெற்றிபெற்றார்.

இவர் இரண்டு கவிதை நூல்களை வெளியிடுள்ளார். அவையானவை விரிற்றிங் அவர்சு (Visiting Hours) மற்றும் இசுரிக்போய் (Stickboy).

2007 இல் வி ஆர் மோர் (We Are More) என்ற கனடா பற்ரிய ஒரு கவிதையை கனடிய சுற்றுலாத் திணைக்கள ஆதரவுடன் இவர் வெளியிட்டார்.

2013 பெப்ரவரியில் ரு திசு டே (To This Day - இன்றுவரைக்கும்) என்ற இவரது ஒடுக்குபவர்களுக்கு (bullies) எதிரான கவிதை ஒரு கிழமையில் 5 மில்லியன் யுரீயுப் பார்வைகளைப் பெற்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Shane-Koyczan-and-the-Short-Story-Long - (ஆங்கில மொழியில்)
  2. To This Day - (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_கொய்சான்&oldid=2691763" இலிருந்து மீள்விக்கப்பட்டது